UAE Tamil Web

ஷார்ஜாவில் உரை நிகழ்த்தும் இசைப்புயல் AR ரஹ்மான் – எங்கே? எப்போது?

AR Rahman

இசைப்புயல் AR ரஹ்மான் ஷார்ஜா ஆர்ட் ஃபவுண்டேஷன் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் தனது இசை அனுபவம் குறித்து அவர் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்குயிர் மிடில் ஈஸ்ட் (Esquire Middle East) நிறுவனத்தின் எடிட்டர் வில்லியம் முல்லல்லி ரஹ்மானை நேர்காணல் செய்ய இருப்பதாக ஷார்ஜா ஆர்ட் ஃபவுண்டேஷன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இசைப்புயலும் இதனை ஷேர் செய்துள்ளார்.

ஷார்ஜா ஃபிலிம் பிளாட்ஃபார்ம் 4  டாக்ஸ் ப்ரோக்ராம் (Sharjah Film Platform 4 talks programme) என்னும் நிகழ்ச்சியை ஷார்ஜா ஆர்ட் ஃபவுண்டேஷன் நடத்திவருகிறது. இதில் கலைத்துறையில் சாதித்தவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களது வாழ்க்கைப் பயணம் குறித்தும் கலை மேம்பாடு குறித்தும் உரை நிகழ்த்தச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நேர்காணல் நடைபெறும் தேதி :

நவம்பர் 24, 2021 (புதன்கிழமை) இரவு 8 – 9 மணிவரையில்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

மிராஜ் சிட்டி சினிமா,

அல் முரேஜா ஸ்கொயர்,

ஷார்ஜா.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://films.sharjahart.org/welcome என்ற முகவரிக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap