UAE Tamil Web

அமீரகத்தில் மணம்வீச இருக்கும் மதுரை மல்லி – இந்திய அரசின் புதிய அறிவிப்பு..!

madurai malli

பிடித்த பூ எனக்கேட்டால் நம்மில் பலரும் முதலில் சொல்வது மல்லிகை தான். அப்படி தமிழர்களின் இல்லற மற்றும் ஆன்மிக வாழ்க்கையில் மலர்களின் முக்கியத்துவம் அதிகம் என்றாலும் அங்கேயும் மல்லிகையே முன்னிலை வகிக்கிறது. அதுவும் மதுரை மல்லி என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகைப் பூக்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indications) வழங்கப்பட்டது நம் மண்ணிற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

இதனையடுத்து மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட பூக்களை அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” தமிழ்நாட்டிலிருந்து அமீரகத்திற்கு ஏற்றுமதியான புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகை” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஏற்றுமதியான மல்லிகையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முழு அறிக்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

madurai malli
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap