UAE Tamil Web

ஷார்ஜா: திருமணமாகாமலேயே கர்ப்பமான 16 வயது சிறுமி ; கருவை குப்பைத்தொட்டியில் வீசிய அவலம்..!

TEEN GIRL

16 வயதுதான் ஆகிறது அந்தச் சிறுமிக்கு. ஆனால் கர்ப்பம். மருத்துவமனையில் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவளது பெற்றோர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கர்ப்பத்திற்கு காரணம் குறித்தெல்லாம் கேள்விகேட்கவும் நேரமில்லை. கருக்கலைப்பு ஏற்பட்டதால் ரத்தப்போக்கு அதிகமாகவே, அவளது வயிற்றில் இருந்த 6 மாத சிசுவை மருத்துவர்கள் அகற்றினார்கள்.

விஷயம் அறிந்த காவல்துறை மருத்துவமனைக்கு விரைந்து சென்றது. கரு எங்கே எனக் கேட்ட காவல்துறையிடம் குப்பையில் வீசிவிட்டதாக சிறுமியின் தாய் தெரிவித்திருக்கிறார்.

சிறுமி கர்ப்பமானது என்பது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது. ஆறுமாத கருவை குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் ஷார்ஜாவையே அதிர வைத்திருக்கிறது.

TEEN GIRL
3 Shares
Share via
Copy link
Powered by Social Snap