UAE Tamil Web

கழிவுநீர் குழாய்க்குள் சிக்கிய பூனையை மீட்கச் சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி..!

NAT-Dubai-police-rescue-girl-trapped-in-bathroom-2

துபாய்: அல் கவனீஜ் பகுதியில் இருக்கும் வில்லா ஒன்றில் கழிவுநீர் குழாய்க்குள் சிக்கிக்கொண்ட தனது பூனையை மீட்கச் சென்ற இளம்பெண்ணின் கரம் குழாய்க்குள் சிக்கிக்கொண்டது. உடனடியாக துபாய் காவல்துறையின் மீட்புப்படை விரைந்துவந்து இளம்பெண்ணை மீட்டிருக்கிறது.

துபாய் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் மீட்புப்படையின் தரைவழி மீட்புப்பிரிவு இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா பிஸ்வா,” உட்புறம் தாழிடப்பட்ட அறைக்குள் கழிவுநீர் குழாயில் இளம்பெண்ணின் கை சிக்கிக்கொண்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வில்லாவிற்கு விரைந்த அதிகாரிகள் அதற்கான பிரத்யேக கருவிகளின் துணைகொண்டு பூனையையும் இளம்பெண்ணையும் மீட்டிருக்கிறார்கள்” என்றார்.

மீட்புப்பணியில் ஈடுபட்ட லெப்டினன்ட் அப்துல்லா அல் நுவைமி இதுகுறித்துப் பேசுகையில்,” குளியலறைக்குள் சென்ற பெண், கதவைத் தாழிட்டிருக்கிறார். 8 செண்டிமீட்டர் விட்டமே இருந்த கழிவுநீர் குழாய்க்குள் செல்போன் மூலமாக டார்ச் அடித்துப் பார்த்த பிறகே கையை உள்ளே விட்டிருக்கிறார். ஆனால் அவரால் கையை வெளியே எடுக்க இயலவில்லை. இதனால் உதவி வேண்டி அவர் சப்தம் எழுப்பியிருக்கிறார். துபாய் காவல்துறைக்கு பெண்ணின் பெற்றோர் அழைத்து விஷயத்தைத் தெரிவித்துள்ளனர்” என்றார்.

ஒருவழியாக மீட்புப்படையின் உதவியுடன் பெண்ணும் பூனையும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

NAT-Dubai-police-rescue-girl-trapped-in-bathroom-2
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap