UAE Tamil Web

குளோபல் வில்லேஜின் நிறைவு நாள் நீட்டிப்பு.. உற்சாகத்தில் பார்வையாளர்கள்..!

துபாயின் குளோபல் வில்லேஜின் சீசன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துபாயில் குளோபல் வில்லேஜ் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டது. அதுபோல் குளோபல் வில்லேஜ் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குளோபல் வில்லேஜின் சீசன் டிக்கெட் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைய இருந்த குளோபல் வில்லேஜின் 26-வது சீசன் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளோபல் வில்லேஜின் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் 15 திர்ஹம்ஸ் ஆகும். நேரடியாக சென்று வாங்கினால் 20 திர்ஹம்ஸ் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap