சார்ஜாவிலிருந்து சென்னைக்கு கால்களின் பாதங்களில் ஒட்டவைத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியா விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரின் காலணிகளை கழற்றி அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது, அவரது கால்களின் அடிப்பாதங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்ததில், சிறிய பார்சல் போன்று தங்கப்பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
இதையடுத்து 12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசையை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.