பொம்மைக்குள் மறைந்து வைத்து கடத்தப்பட்ட 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றது. அதில் சென்ற பயணி ஒருவர், தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சந்தேக பேரில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சி செய்த அப்பயணியை, அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பொருட்களான பொம்மை மற்றும் இசைக் கருவிக்குள் 45 -க்கும் மேற்பட்ட தங்க கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனை மதிப்பிட்டதில் 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 110 கிராம் தங்கம் இருந்தது. பின்னர் கடத்தப்பட்ட அந்த தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.