துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு, இண்டிகோ மற்றும் எமிரேட்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் ஒருவரது லேப்டாப் மற்றும் சார்ஜருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான 2.49 கிலோ எடையுள்ள, 43 தங்கத் துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அது போல மற்றோரு பயணி துபாயில் இருந்து சென்னை வந்தடைந்த நிலையில் அவரை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 686 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இரண்டு பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
மொத்தம் 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.