UAE Tamil Web

இந்திய நடிகரை கௌரவித்த அமீரகம் – நடிகர் ஜெயராமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது

பன்முகத்திறமை கொண்ட பல நடிகர்கள் தென்னிந்திய திரையுலகில் உள்ளனர், அந்த வரிசையில் காமெடி, செண்டிமெண்ட் என்று இரு கேரக்டர்களிலும் அசத்தும் ஒரு நடிகர் தான் ஜெயராம். கேரள திரையுலகை கலக்கி வந்தாலும் இவர் பூர்விகம் தமிழகம் தான்.

1993ம் ஆண்டு வெளியான கோகுலம் என்ற தமிழ் திரைப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். விரைவில் வெளியாகவுள்ள மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் “ஆழ்வார்க்கடியான் நம்பி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் மலையாள திரையுலகில் கலக்கி வரும் இவருக்கு நமது அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது.

அமீரகத்தில் தொழில்முனைபவர்கள், அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதிப்பவர்கள் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய இந்த விசாவை தற்போது தமிழ் நடிகர் ஜெயராமுக்கு வழங்கி கௌரவித்துள்ளது அமீரகம்.

ஏற்கனவே பல தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலக நடிகர் நடிகைகளுக்கு நமது அமீரக அரசு Golden Visa வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் தத், ஷாருகான், மோகன்லால், மம்மூடி, விஜய் சேதுபதி, மீனா உள்ளிட்ட பலர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap