UAE Tamil Web

அபுதாபி வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. இலவச பார்க்கிங் சேவையை அறிமுகப்படுத்திய போக்குவரத்து ஆணையம்!

ரமலான் மாதம் 29 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊ ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறையாகும்.

இந்த நிலையில் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் அபுதாபி வாகன ஓட்டிகளுக்கு 8 நாட்கள் இலவச பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அபுதாபியில் பொது பார்க்கிங் இடங்கள் மற்றும் Darb டோல் கேட் பார்கிங்கில் ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை முதல் மே 7 சனிக்கிழமை காலை 7:59 மணி வரை இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“MAWAQiF  பார்க்கிங் கட்டணம் ஏப்ரல் 29 வெள்ளி முதல் மே 7 சனிக்கிழமை காலை 7:59 மணி வரையிலும் முசாஃபா M-18 டிரக் பார்க்கிங் ஸ்லாட்டிலும் பார்க்கிங் கட்டணம்  இலவசம் என்று அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கூறியது.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதையும், போக்குவரத்தை தடை செய்வதையும் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை ITC கேட்டுக் கொண்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap