UAE Tamil Web

துபாயில் வசிப்பவர்களுக்கு தித்திப்பான செய்தி… இந்த certificateக்கு இனி 24 மணி நேரம் தான்… அலையாமல் வாங்குவது எப்படி?

மற்ற நாடுகளில் ஒரு சான்றிதழ் வாங்க குறைந்தது 1 மாத காலமாவது ஆகும். ஆனால், துபாயின் புதிய சட்டத்தின் படி சில மணி நேரங்களில் முக்கியமான ஒரு ஆவணத்தினை கையில் வாங்கி விடலாம் என்றால் நம்ப முடிகிறதா?

துபாய் நாட்டில் கல்யாணம் செய்துகொள்ளும் இஸ்லாமியர் இல்லாத தம்பதிகளுக்கு, புதிய ஃபெடரல் சட்டத்தின்படி பிப்ரவரி 1 முதல் வெறும் 24 மணி நேரங்களில் சிவில் திருமண லைசன்ஸை பெற முடியும். இதற்கு தம்பதிகள் தங்களின் அத்தியாவசிய சான்றிதழ்களை PDFஆக வைத்திருக்க வேண்டும். மேலும், ஒரிஜினல் ஐடிகளும் தயாராக இருக்க வேண்டும் என அமீரக வழக்கறிஞர் டயானா ஹமேட் தெரிவித்து இருக்கிறார்.

நாட்டில் போடப்படும் குடும்ப வழக்குகளை ஒழுங்குப்படுத்துவதற்காக இஸ்லாம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில், ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கான சிவில் திருமணம்’ என்ற புதிய சேவையை துபாய் நீதிமன்றங்கள் அமலில் கொண்டு வந்து இருப்பதாக டயானா குறிப்பிட்டார்.

இந்த ஃபெடரல் சட்டத்தின்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இஸ்லாமியர் அல்லாத பொதுமக்கள் திருமணம், டைவர்ஸ் மற்றும் வாரிசு உரிமை ஆகிய சட்டத்தின் கொண்டு 7 பக்கங்களில் அமைந்து உள்ளது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் திருமண நிலைகள் நீதிமன்றத்தின் முன் ஒழுங்குப்படுத்தப்படும். கணவனோ அல்லது மனைவியோ தனியாக தொடுக்கப்படும் விவகாரத்து வழக்குகளையும் கவனிக்கும்.

மேலும், விவகாரத்திற்கு பிறகு ஜீவனாம்சம், குழந்தைகளின் கஸ்டடி உள்ளிட்ட சில நடவடிக்கைகளையும் முறைப்படுத்த இந்த புதிய ஆணை-சட்டம் உதவுகிறது.

இதுகுறித்து மேலும் பேசிய டயானா ஹமடே, இந்த புதிய சட்டம் மூலம் திருமணங்கள் முறையாக செய்யப்பட இருக்கிறது. குறிப்பிட்டு இருக்கும் நிபந்தனைகள் நிவர்த்தி செய்யும் பட்சத்தில், இஸ்லாமியர் அல்லாதவர்கள் கூட சிவில் முறையில் கல்யாணம் செய்துக் கொள்ள முடியும்.

அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

* கணவன் மற்றும் மனைவி இஸ்லாமியராக இருக்க கூடாது.

* இருவரின் வயதும் 21க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

* தம்பதிகளில் ஒருவர் கண்டிப்பாக அமீரகத்தில் வசித்து வர வேண்டும்.
* செய்யப்பட இருப்பது முதல் திருமணம் தான் என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
* அனைத்து சான்றுகளும் pdfல் மட்டுமல்லாமல் ஒரிஜினலையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap