அமீரக வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் நற்செய்தி.!

கடந்த வருடம் ADNOC நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்தி வந்தது. அதில், இனி நீங்கள் காருக்கு பெட்ரோல் நிரப்பும் போது, அந்த பெட்ரோல் நிரப்பும் பணியாளருக்கு நீங்கள் 10 திர்ஹம் சேவை தொகை கொடுக்க வேண்டும் அல்லது இந்த சேவை பணத்தை தவிர்க்க விரும்புபவர்கள் நீங்களே பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்பது தான்.

இந்நிலையில், வியாழக்கிழமை(31/10/2019) முதல் பெட்ரோல் நிரப்பும் பணியாளருக்கான சேவை தொகை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பை ADNOC நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அரபு நாளேடான எமராத் அல் யூம் (Emarat Al Youm) செய்தியில் தகவல் வந்துள்ளது.

ADNOC நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Loading...