UAE Tamil Web

ஏர் இந்தியா விமானத்தை டாடாவிடம் ஒப்படைத்த இந்திய அரசு…

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று இந்திய அரசு ஒப்படைக்க உள்ளது.

தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் கைகளுக்கு சென்றுள்ளது.

இதனை முன்னிட்டு, மும்பையில் இருந்து டெல்லி, பெங்களூரு மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு புறப்படும் நான்கு ஏர் இந்தியா விமானங்களில் உணவு சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1932 ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா 1953 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் விமான சேவை என்ற பெருமையோடு ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap