துபாய் EXPO 2020 கண்காட்சியில் உள்துறை அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு ஃபஜா சமூக பாதுகாப்பு நிதியக ஆதரவின் கீழ் 100 பேருக்கு திருமணம் நடைபெற்றது.
உள்துறை அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு துபாய் EXPO-வின் அமீரக அரங்கிற்கு வெளியே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொண்டு 100 மணமக்களை வாழ்த்தினார்.
துபாய் EXPO 2020-இல் முதன்முதலில் நடைபெற்ற இந்த திருமணத்தில், 100 மாப்பிள்ளைகளுக்கு உதவும் வகையில் மதிப்புமிக்க பரிசுகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன. அமீரக சமூக மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் நோக்கமாகக் கொண்ட ஃபஜா சமூக பாதுகாப்பு முயற்சியின் கிழ் இந்த திருமணம் நடைபெற்றது.
இது குறித்து ஃபஜா சமூக பாதுகாப்பு சமூக பாதுகாப்பு நிதியத்தின் பொது மேலாளர் கர்னல் அகமது முகமது புஹாரூன் கூறியதாவது, “இந்த நாள் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். ஷேக் சைஃப் பின் சயீதின் வருகை இந்த திருமணத்தை கௌரவித்துள்ளது, பாரம்பரியமான முன்முயற்சிக்கு புத்துயிர் அளிக்க உதவியுள்ளது. ஃபஜா சமூக பாதுகாப்பு நிதியகம் இத்திருமணச் செலவை ஏற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் பார்வையாளர்கள் முன்னிலையில் அமீரகத்தின் உண்மையான மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆண்டு 100 பேருக்கு திருமணம் நடத்த துபாய் EXPO-வை தேர்வு செய்தோம்” என்றார்.