UAE Tamil Web

ஷார்ஜா ‘ரமலான் நைட்ஸ்’ ஷாப்பிங் கண்காட்சியில் செம்ம ஆஃபர்.. அலை மோதும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!

ரமலானை முன்னிட்டு அமீரக மக்கள் ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பார்வையிட ரமலான் நைட்ஸ் கண்காட்சி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரால் நடத்தப்பட்டு வரும் இந்த ரமலான் நைட்ஸ் கண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இன்னும் சில தினங்களில் பெருநாள் வரவிருப்பதால் இந்த விற்பனை கண்காட்சிக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகைத் தருகின்றனர்.

SHJ RA 1-1650292971400

ஏப்ரல் 12 முதல் 26 வரை நடைபெறும் இந்த கணகாட்சியில் பல முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல நிறுவன ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஷாப்பிங் கண்டகாட்சியில் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இக்கண்காட்சியில் கலாச்சார, பாரம்பரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

SHJ RA 5-1650292985922

இது குறித்து ஷார்ஜாவின் எக்ஸ்போ சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மித்ஃபா கூறுகையில், “முந்தைய ஆண்டுகளில் ரமலானின் போது ‘ரமலான் நைட்ஸ்’ அனைவரையும் கவரக்கூடிய கண்காட்சியாக அமைந்தது. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

SHJ RA 3-1650292978692

இந்த ரமலான் நைட்ஸ் கண்காட்சியானது, மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap