UAE Tamil Web

அவசர நேரத்தில் உதவி – அபுதாபி இளவரசருக்கு கிரீஸ் பிரதமர் நன்றி!

கிரீஸ் நாட்டின் 2வது பெரிய தீவு நகரமான எவியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. வேகமாக பரவும் காட்டுத்தீயால் எவியா தீவு, புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Greece wildfires:Thousands flee island of Evia as blazes continue to ravage lands | News | DW | 07.08.2021
Credit: Reuters

இந்த நிலையில் கிரீஸ் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுப்படி காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அந்த ஹெலிகாப்டர் மூலம் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அத்துடன் தீயை அணைக்கத் தேவையான கூடுதல் உபகரணங்கள், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருட்களும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. காட்டுத் தீயால் உயிரிழந்தோருக்கு அபுதாபி இளவரசர் தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

Abu Dhabi Crown Prince Sheikh Mohammed Bin Zayed Al Nahyan to visit China next week - The Statesmanஇந்த நிலையில் உதவிகளை பெற்றுக்கொண்டதும் கிரீஸ் நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) அபுதாபி இளவரசருக்கு நேரடியாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.  இக்கட்டான சூழலில் அமீரகத்தின் உதவி முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பாராட்டியுள்ளார். இருநாட்டு உறவும் நல்ல முறையில் தொடர்ந்து நீடிக்கும் என கிரீஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link