UAE Tamil Web

பழங்களை வெட்டும் கத்தியால் நகங்களை சுத்தம் செய்த மளிகை கடை ஊழியர்.! வைரலான வீடியோ.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

knife

ஆசிய தொழிலாளி ஒருவர் உடல்நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியது கண்டறியப்பட்டதை அடுத்து, ஜுமா சந்தையில் (மசாஃபி சந்தை) உள்ள ஒரு மளிகை கடையை புஜைரா நகராட்சி அதிரடியாக மூடியுள்ளது.

closed

குறிப்பிட்ட மளிகை கடையில் வேலை பார்த்த ஆசிய தொழிலாளி ஒருவர் தனது நகங்களை காய்கறி மற்றும் பழ வெட்டும் கத்தியை கொண்டு சுத்தம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது.

வைரலான வீடியோ கிளிப் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் குறிப்பிட்ட கடைக்குச் சென்றன. பின் அந்த கடைக்கும் அந்த தொழிலாளிக்கும் எதிராக தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று புஜைரா நகராட்சியின் இயக்குநர் முகமது சைஃப் அல் ஆஃப்காம் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் சட்டங்கள் மற்றும் சுகாதார விதிகளுக்கு இணங்காத எந்தவொரு வணிக நிறுவனத்தையும் நகராட்சி பொறுத்துக்கொள்ளாது என்றும், குற்றவாளிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பராமரிக்கவும், உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும், சுகாதாரம் மற்றும் சுகாதார விதிகளைப் பின்பற்றவும் புஜைரா நகராட்சி ஆர்வமாக உள்ளது என்றார்.

knife
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap