UAE Tamil Web

நான் தயார் நீங்கள்..? – சேலஞ்ச் விடுத்த துபாய் இளவரசர்..!

Hamdan-in-DFC_

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புதிய சேலஞ்ச் ஒன்றினை விடுத்துள்ளார். அதென்ன சேலஞ்ச்?

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சின் 5 வது சீசன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று (அக்டோபர் 28) துபாயில் துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு விளையாட்டு உடற்பயிற்சிகள் துபாய் முழுவதும் நடைபெற இருக்கின்றன.

இதில் துபாய் இளவரசரும் பங்கெடுக்க இருக்கிறார். இதுகுறித்து துபாய் இளவரசர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” அனைத்து வயதுடைய மக்களையும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சில் பங்கேற்க அழைக்கிறேன். துபாயை துடிப்பு மிகுந்த நகரமாக மாற்றும் வலிமை நம்மிடத்தில் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் www.dubaifitnesschallenge.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap