ஐக்கிய அரபு அமீரகத்தில் தொங்கும் ரயில் போக்குவரத்து விரைவில்…!!

Hanging rail transport to come up in UAE ( Photo : WAM)

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொங்கும் ரயில் போக்குவரத்து விரைவில் வர இருக்கிறது.

உச்சநீதிமன்ற உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, ஷார்ஜா ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் (SRTIP) இந்த புதிய யூனிகார்ஸ், தொங்கும் பாதையில் போக்குவரத்து அமைப்புக்கான ஸ்கைவே திட்டத்தின் சோதனையை அறிமுகப்படுத்தினார்.

ஷேக் சுல்தானின் SRTIP-யின் வருகையின் போது, இந்த திட்டத்தின் பணிகளையும், யூனிகார் சோதனை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.

ஸ்கைவே மூன்று சோதனை தடங்களை கட்டமைக்க தொடங்கியுள்ளது, அதாவது பூங்கா தொடக்கத்திலிருந்து (ஷார்ஜா விமான நிலைய சாலை) அதன் இறுதி வரை (Mweileh சாலை).

குறுகிய பாதையில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, மேலும் நீண்ட தடங்களில் யூனிகார் சோதனை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.