UAE Tamil Web

இந்தியாவிலிருந்து ஷார்ஜாவுக்கு வரும் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வருகைத் தரும் பயணிகளுக்கான RT-PCR சோதனையை ரத்து செய்துள்ளதாக ஏர் அரேபியா விமானம் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கான RT- PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏர் அரேபியாவிலிருந்து ஷார்ஜா வரும் பயணிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, நேபாளம், பங்களாதேஷ், எகிப்து மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து ஷார்ஜாவிற்கு வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனைத் தேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் அரேபியாவின் புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடிமக்கள் உட்பட ஏர் அரேபியாவில் பயணிக்கும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் கோவிட்-19 PCR பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தில் RT-PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனை முடிவுகள், QR கோடுகளை வைத்திருக்க வேண்டும்.

இது குறித்து ஏர் இந்தியாவின் வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பி.பி. சிங், இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட RT-PCR சோதனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனை ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap