அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்களை அரசு அறிவித்தது.
ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டது.
வானியல் கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 2 தேதி ரமலானின் முதல் நாளாக இருக்கும். இஸ்லாமிய முறைப்படி பிறை (சந்திரனை) பார்ப்பதன் மூலம் சரியான தேதி தீர்மானிக்கப்படும்.
அதன் படி நோன்பு பெருநாள் ஈத் அல் பித்ர் ஷவ்வாலின் முதல் நாளில் குறிக்கப்படுகிறது. ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலான் மாதத்திற்குப் பிறகு வரும் மாதம். வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் மே 2 அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகத்தின் விடுமுறைகள் பட்டியலின்படி, குடியிருப்பாளர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஈத் அல் பித்ர் விடுமுறை இருக்கும்.
ரமலான் 29 நாட்கள் நீடித்தால், குடியிருப்பாளர்களுக்கு 4 நாட்கள் விடுமுறைக் கிடைக்கும். ரமலான் 30 நாட்கள் நீடித்தால், 5 நாள் விடுமுறைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.