அமீரகத்தில் கொரோனாவுக்கான PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ள 40 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயித்துள்ளது அபுதாபி அரசு. அபுதாபி அரசால் குறைக்கப்பட்ட இந்த விலைக் குறைப்பு அமீரகத்தில் உள்ள அனைத்து மருத்துவமையங்களிலும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் சில பகுதியில் 50 திர்ஹம்ஸ் முதல் 100 திர்ஹம்ஸ் வரை PCR பரிசோதனைக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) அமீரகத்தில் கொரோனா விதிமுறைகளை நீக்கி இந்த விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
NCEMA-வின் புதிய விதிமுறைகளின் படி, பிப்ரவரி 28 முதல் அபுதாபிக்குள் நுழைய AL HOSN கிரீன் பாஸ் தேவையில்லை என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மேலும் கொரோனா அறிகுறிகளை கண்டறிய பரிசோதிக்கும் EDE ஸ்கேனரும் அபுதாபி எல்லையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் உள்ள பொது இடங்களுக்கு செல்ல AL HOSN கிரீன் பாஸ் சேவை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.