UAE Tamil Web

அமீரக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரமலான் மாதத்திற்கான வேலை நேரங்கள் அறிவிப்பு..!

அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 அல்லது 3 அன்று துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்களை  அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும்.

அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2:30 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை மட்டும் 12 மணி வரையிலும் பணிபுரிய வேண்டும்.

இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) மே 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த தேதிகள் பிறை தென்படும் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap