UAE Tamil Web

அபுதாபியை போன்று சவுதியிலும் தாக்குதல் நடத்திய ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.. 12 பேர் படுகாயம்!

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் ஏற்படுத்த வந்த டிரோனை ராணுவத்தினா் இடைமறித்து அழித்தபோது, டிரோனின் பாகங்கள் சிதறி விழுந்ததில் இந்தியா் உள்பட 12 போ் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஏமனில் மீண்டும் அமைக்க ராணுவ நடவடிக்கை மூலம் ஆட்சியை கொண்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணி படையின் செய்தித் தொடா்பாளா் துா்கி அல் மால்கி கூறியதாவது:

ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் அப்ஹா சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அதனை சவுதி பாதுகாப்பு படையினா் அழித்தனர். டிரோனை இடைமறித்து தாக்கியபோது அதன் பாகங்கள் விமான நிலைய வளாகத்தில் விழுந்தன. இதில் 12 போ் காயமடைந்ததாக தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அமீரகத்தின் அபுதாபி விமான நிலைய பகுதியில் உள்ள அட்னாக் எண்ணெய் நிறுவனத்ததைக் குறிவைத்து ஹவுதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியா்கள் உட்பட ஒரு பாகிஸ்தானியா் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap