அபுதாபி மற்றும் அல் அய்ன் சாலைகளில் கனரக லாரிகள் மற்றும் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் மற்றும் பேருந்துகள் அபுதாபி மற்றும் அல் அய்ன் சாலைகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ரமலான் முழுவதும் தடை செய்யப்படுவதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.
ரமலான் மாதத்தில் போக்குவரத்து சீராக நடைபெறவும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்குமாறும், ரமலான் மாதத்தில் அமீரக சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பங்களிக்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.