பலத்த மழை காரணமாக துபாய் விமானங்கள் பாதிப்பு..!

Heavy rain affects Dubai flights: Airport spokesperson (Photo: Gulf News)

அமீரகத்தில் நிலையில்லா வானிலை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல், துபாய் விமான நிலையங்களுக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு சில இடையூறுகள் எதிநோக்கி இருப்பதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் “துபாய் விமான நிலையங்களின் தகவல் அறிய www.dubaiairports.ae என்ற வலைத்தள முகவரியை பயன்படுத்தலாம் அல்லது விமானத் தகவல்கள் குறித்த அப்டேட் அறிந்துகொள்ள அந்தந்த விமான வலைத்தளங்களுக்கு சென்று சரிபார்க்க வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூடுதலாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சறுக்கல் மூலம் விபத்துகள் ஏற்படாமல் இருக்க கனமழையின் போது வாகனத்தின் வேகத்தை குறைக்குமாறு துபாய் காவல்துறை ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளது.