அமீரகத்தில் பல பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்தே பல மணி நேரங்களுக்குப் பனிமூட்டம் நிலவியது.
இந்த பனிமூட்டம் காரணமாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
துபாய், ஷார்ஜா, அபுதாபி, அல் அய்ன், ராஸ் அல் கைமா பகுதிகளில் பனிமூட்டம் நிலவும் என்று சிவப்பு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் வாகன ஓட்டுநர்களை எச்சரித்திருத்துள்ளது.
செவ்வாய்க்கிழமையான நாளை காலையிலும் இந்த வானிலை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் தற்போதைய வெப்ப நிலை 22 டிகிரி சென்டிகிரேட், 71.6 டிகிரி பாரன்ஹீட் ஆக உள்ளது.