UAE Tamil Web

மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று; 6 அடிக்கு உயரும் அலைகள் – வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட எச்சரிக்கை..!

Rough Sea

அமீரகத்தில் இன்று கடும் வேகத்தில் காற்றானது வீசும் எனவும் கடலலைகள் ஆளுயரத்திற்கு எழும் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை வெளியிட்டுள்ள தேசிய வானிலை ஆய்வுமையம் இன்று பிற்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணிவரையில் அமீரகத்தில் வடமேற்காக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவின் மேற்குப்பகுதியில் கடல் அலைகள் 6 அடி உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே வாகனவோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Rough Sea
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap