UAE Tamil Web

இனி அமீரகத்திற்கு வெளியே 6 மாதத்திற்கு மேல் தங்கினாலும் விசா கேன்சல் ஆகாது – யாரெல்லாம் தகுதியுடையவர்கள்..?

UAE-visa

அமீரக குடியேற்ற விதிமுறைகளைப் பொறுத்தவரையில் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் நபர்கள் அமீரகத்திற்கு வெளியே 6 மாதத்திற்கு மேல் தங்கியிருந்தால் அவர்களது விசா தானாகவே காலாவதியாகிவிடும். அவர்கள் புது விசா எடுத்தால் மட்டுமே மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய முடியும்.

ஆனால், டிஜிட்டல் அரசுத் துறை இந்த நடைமுறையில் 6 பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, நீங்கள் 6 மாதத்திற்கும் மேலான காலம் அமீரகத்திற்கு வெளியே தங்கியிருந்தாலும் உங்களது ரெசிடென்சி விசா கேன்சல் ஆகாது. யார் அந்த 6 பிரிவினர்? கீழே பார்க்கலாம்.

  1. எமிராட்டி கணவனால் ஸ்பான்சர் செய்யப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த மனைவி.
  2. தனது முதலாளியால் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் அரசுப் பணியாளர்கள் (சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
  3. வெளிநாட்டில் படிக்கும் மாணவர் அல்லது வெளிநாட்டில் சிகிச்சை பெறும் ஒருவருடைய வீட்டுப் பணியாளர்கள்.
  4. வெளிநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக மற்றும் தூதரகப் பணியாளர்களுடைய வீட்டுப் பணியாளர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருப்பு விசாவைக் கொண்ட தூதரக / துணைத் தூதரக  ஊழியர்கள்.
  5. பயிற்சி அல்லது சிறப்புப் படிப்புகளில் கலந்துகொள்வதற்காக தங்கள் முதலாளியால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள். வெளிநாட்டில் உள்ள முதலாளிகளின் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.
  6. அமீரகத்தில் வசிக்கும் மாணவர் வெளிநாட்டில் இருக்கும் பல்கலைகழகத்திற்கு சென்று படிக்க நேர்கையில்.

மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சூழ்நிலையில் இருப்பவர்கள் அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்கள் தங்கியிருந்தாலும் அவர்களது விசா கேன்சல் செய்யப்பட மாட்டாது.

UAE-visa
51 Shares
Share via
Copy link