UAE Tamil Web

அபுதாபியில் 19 பேரை காயப்படுத்திய தீ விபத்து.. தன் உயிரை பணயம் வைத்து பிற உயிர்களை காப்பாற்றிய வீர மங்கை – தலைவர்கள் வாழ்த்து

சில தினங்களுக்கு முன்பு அபுதாபியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றியதற்காக அமீரகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தற்போது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இமான் அல் சஃபாக்சி என்ற அந்த பெண், பிறரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டபோது காயமடைந்ததால் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

NCEMA அளித்த தகவலின்படி அந்த வீர மங்கையை சந்தித்த தலைவர், அலி சயீத் அல் நெயாடி, அவர் “விரைவாக குணமடையவும், நல்ல ஆரோக்கியம் பெறவும் வாழ்த்தினர். மேலும் காயமடைந்தவர்களுக்கு உதவுவதில் அவரது துணிச்சலான செயலையும் வெகுவாக பாராட்டினார்” என்று கூறியுள்ளது.

மனிதநேயம் மற்றும் துணிச்சலான இத்தகைய செயல்கள் அமீரக சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் அல் நெயாடி கூறினார். இமானைப் பற்றி அமீரகம் பெருமிதம் கொள்கிறது என்று கூறி அவருக்கென்று தனி ஹேஷ்டேக்கையும் ஆணையம் உருவாக்கியுள்ளது.

அல் ஜாஹியா பகுதியில் உள்ள 30 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap