UAE Tamil Web

வீடியோ: அபுதாபி இளவரசருக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் மிக உயரிய விருது – எதற்காக தெரியுமா?

sheikh

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் துணைத் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் ஃபார் நியர் ஈஸ்ட் பாலிசி (Washington Institute For Near East Policy) விருது அளிக்கப்பட்டுள்ளது.

நெடுநாள் அரசியல் உறவு இல்லாமல் இருந்த அமீரகம் – இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவின் ஆப்ரகாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தன. இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக அபுதாபி பட்டத்து இளவரசருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – அமீரகம் இடையே எப்பட்டப்பட்ட இந்த ஆபிரகாம் ஒப்பந்தம் பற்றியும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் குறித்தும் விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

sheikh
0 Shares
Share via
Copy link