எக்ஸ்போ 2020 க்கான ஏலத்தை அமீரகம் எடுத்ததும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இன்று உலகளாவிய பிரம்மாண்ட எக்ஸ்போவை நடத்திவருவதும் நமக்குத் தெரிந்ததே. இந்நிலையில் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ள எக்ஸ்போவை தங்களது நாட்டில் நடத்த பல்வேறு நாடுகளும் ஆர்வங்காட்டிவருகின்றன.
இந்த ஏலத்தில் ரஷியா, உக்ரேன், தென்கொரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் எக்ஸ்போ 2030 க்கான ஏலத்தில் சவூதிக்கு உதவி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்போ உருவாக்கத்தில் பெற்ற அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தினை சவூதியுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
تقدمت المملكة اليوم بطلب استضافة إكسبو 2030. نعلن من اليوم دعم طلب المملكة، ونعلن أيضا أن المعارف والخبرات التي اكتسبناها خلال ٧ سنوات من الإعداد لإكسبو 2020 ستكون متاحة للأشقاء.
آثار إكسبو ستمتد لسنوات ونجاح المملكة نجاح لكل المنطقة. كل التوفيق لأخي محمد بن سلمان في هذا المشروع— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 29, 2021
