அமீரகத்தில் வெப்பநிலை கனிசமாக குறைய வாய்ப்பிருப்பதால் வானிலை குளிர்ச்சியாக இருக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.
இது குறித்து அமீரகத்தில் தேசிய வானிலை மையம் குறியிருப்பதாவது, “இன்றைய வானிலை புழுதி நிறைந்ததாகவும், வெப்பநிலையில் கனிசமாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். இன்று இரவு மற்றும் திங்களான நாளை காலை அமீரகத்தின் சில உட்பகுதிகளில் குறிப்பாக கிழக்கு பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும்.
சில நேரங்களில் காற்று, மிதமானதாகவும் வேகமாகவும் அடிக்கக்கூடும், இக்காற்றின் காரணமாக கடலில் புழுதி அதிகப்படியாக இருக்கும்.
அரேபிய வளைகுடாவில் கடலிலும், ஓமன் கடல் பகுதியில் மிகவும் கொந்தளிப்பாகவும் ஏற்படும். அரேபிய வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 6 மணி வரை 10 அடி உயரத்தில் அலைகள் எழக்கூடும்” என்று தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
