UAE Tamil Web

அமீரகம்.. கல்வித் துறையில் புதிய அமைச்சர்கள்.. அறிமுகம் செய்து வைத்தார் ஷேக் முகமது – அனைவரையும் வாழ்த்தி அவரே வெளியிட்ட ட்வீட்!

அமீரகத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம் உட்பட நாட்டின் கல்வித் துறையில் சில முக்கிய மாற்றங்களை அமீரக துணைத் தலைவர் தற்போது அறிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில், அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், புதிய கல்வி அமைச்சராக அஹ்மத் பெல்ஹவுல் அல் ஃபலாசி பணியாற்றுவார் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சாரா அல் அமிரி, பொதுக் கல்வி மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

மதிப்பிற்குரிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஷேக் முகமது தனது பதிவில் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட பதிவில் “முன்பு இருந்த கல்வி முறை தற்போது மாறியுள்ளது, நேற்று வரை நம்மிடையே இருந்த லட்சியங்கள் இன்று மாறியுள்ளது.” “வளரும் சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்துதர வேண்டும்”. நிச்சயம் அனைவரும் இதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap