அமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

Hijri New Year holiday for UAE's private, public sector announced

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு UAE மனிதவள மற்றும் ஏமிராட்டிசேசன் அமைச்சகம், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் 1441 முதல் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இந்தப் பொது விடுமுறை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பெய்டு (Paid) விடுமுறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை MOHRE அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சனிக்கிழமை ஹிஜ்ரி வருடம் 1441 முஹர்ரம் மாதம் முதல் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...