UAE Tamil Web

துபாய் இளவரசருக்கு அசத்தலான பைக்கை பரிசாக அளித்த ஹாலிவுட் நட்சத்திரம்..!

hamdan

துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சூப்பர் 73 எலக்ட்ரிக் மோட்டார் பைக் (super 73 electric bike) ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷேக் ஹம்தான் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித் பரிசளித்த பைக்கில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் “இந்த பைக்கை பரிசளித்ததற்கு நன்றி @வில்ஸ்மித், இந்த பைக்கிற்கு ஸ்காட்டி (scotty) என்று பெயரிட்டுள்ளேன் என்ற பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

bike
Image Credits- Gulf News

வில்ஸ்மித் நடித்த ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல் ஏர் (the Fresh Prince of Bel Air), தி பர்ஷூட் ஆப் ஹப்பினஸ் (The Pursuit of Happyness), பேட் பாய்ஸ் (bad boys) பேன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை. வில் ஸ்மித் அடிக்கடி அமீரகம் வருவது வழக்கமான ஒன்றாகும். இவருக்கும் ஹம்தானுக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது.

இதுமட்டுமின்றி கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரு வார இறுதி நாளில் (week end) வில்ஸ்மித் மற்றும் கிப்ஸன் இருவரையும் ஹம்தான் ஸ்கை டைவிங் அழைத்து சென்றுள்ளதோடு, ஒரு நாள் முழுவதும் இவர்களுக்காக செலவழித்துள்ளார். இதில் ஹெலிகாப்டர் சுற்றுபயணங்களும் (helicopter ride) அடங்கும்.

will smith
Image Credits- Gulf News

வில் ஸ்மித் நடித்த மிகவும் பிரம்மாண்ட படமான ஐ ஆம் லெஜெண்ட் (I am legend) என்ற படம் ஃபுர்ஜ் கலிபாவின் உயரமான கட்டிடத்தில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

hamdan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap