துபாயின் 69வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான ஹமீத், ஷார்ஜாவில் பைக் மெசேஞ்சராக வேலை செய்து வருகிறார். வெற்றிபெற்ற தொகையை வைத்து இந்தியாவில் சொந்தமாக தங்கள் கனவு வீட்டைக் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மஹ்சூஸ் டிராவில் வெற்றிபெற்றது குறித்து தெரவித்த ஹமீத், “நான் வெற்றி பெற்றுவிட்டதாக என் நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கூறியபோது நான் மிகவும் அதிர்ச்சியுடன் மகிழ்ந்தேன். முதலில் அவர் கூறும்போது என்னால் நம்ப முடியவில்லை.
பின்னர், யூடியூப் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பட்டியலில் எனது பெயரைப் கண்டேன், அதன் பிறகுதான் அதை நம்பினேன். முதலாவதாக இந்த தொகையை வைத்து இந்தியாவில் வீட்டைக் கட்ட உள்ளேன்” என்றார்.
துபாயில் நடந்த 69வது மஹ்சூஸ் வாராந்திர டிராவில் ஹமீதுடன் மற்ற இரண்டு வெற்றியாளர்களும் தலா 1 லட்சம் திர்ஹம்ஸை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.