வேகக்கட்டுப்பாடு குறித்து அபுதாபி காவல்துறை தினந்தோறும் பல்வேறு வகைகளில் சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போதுதான் டாப் கியரில் வாகனங்களை இயக்கி “டாப்பிற்கே” சென்றுவிடுகிறார்கள் சில அவசரவாதிகள்.
இதனால் எதிர்வரும் வாகனங்களும் மோசமான விபத்தைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். சாலை உபயோகிப்பாளர்களின் கவனத்தைக் கருத்தில்கொண்டே வாகனங்களை இயக்க வேண்டும் என அபுதாபி காவல்துறை வாகனவோட்டிகளை எச்சரித்துள்ளது.
#فيديو | #شرطة_أبوظبي : 51 ألف درهم و 12 نقطة مرورية تترتب على تجاوز الإشارة الحمراء .
التفاصيل :https://t.co/PPkHWHdwlC#أخبار_شرطة_أبوظبي pic.twitter.com/vQEPMCZaYe
— شرطة أبوظبي (@ADPoliceHQ) October 22, 2021
இதுகுறித்து அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவில், சிவப்பு சிக்னலில் நிற்காமல் வேகமாக பயணித்த வாகனங்களின் விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இப்படி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 51,000 திர்ஹம்ஸ் அபராதமும் 12 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் எனவும் அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.
அபராதம் எல்லாம் ஒருபுறம் என்றாலும் சில நொடிகள் தாமதமாக செல்வதைத் தவிர்க்க மொத்த வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளுவதை வாகனவோட்டிகள் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
