சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அபுதாபி காவல்துறை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வீடியோவில் அதிவேகமாய் செல்லும் கார்கள் தடம்புரண்டு கோரமான விபத்தை சந்திக்கின்றன.
ஒரு விபத்து. நாம் வினாடியில் செய்யும் தவறு நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடும்.
அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுதல் என தங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல் சாலை உபயோகிப்பாளர்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளுகிறார்கள் சில வாகனவோட்டிகள். இதனைத் தடுக்க அபுதாபி காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
அபுதாபி காவல்துறை வெளியிட்ட அந்த வீடியோவில் உள்ள கார்களில் பயணித்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆகவே, கவனத்துடன் வாகனங்களை இயக்குவோம், பாதுகாப்பாய் வாழ்வோம்.
#فيديو | في ذكرى اليوم العالمي لضحايا حوادث الطرق#شرطة_أبوظبي إلتزام السائقين بالقوانين المرورية يعزز السلامة على الطرق .
التفاصيل:https://t.co/Uv32560eXq pic.twitter.com/xr07BKlW2i
— شرطة أبوظبي (@ADPoliceHQ) November 21, 2021