அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியை குறிவைத்து ஹவுதி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்று அச்சம் எழுந்ததுள்ளது.
உக்ரைனின் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள காரணங்களால் கடந்த புதன்கிழமையன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 90 டாலராக உயர்ந்தது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதன் பாதிப்பு இந்தியாவுக்கு எதிரொலிக்கும் என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக கடனிம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் கடந்த அக்டோபரில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவுற்ற பிற்கு ஏர் இந்தியா நிறுவனம் நேற்று டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் சென்றது குறிப்பிடத்தக்கது.