சவுதி அரேபியாவின் அஹத் அல் மஸாரிஹாவின் தொழில்துறை பகுதியை நேற்று ஏமனின் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சூடான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளாதாகவும் மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கஓ நேற்று சவுதி மீது தாக்குதல் நடத்துயுள்ளனர்.
முன்னதாக அமீரகம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாலும், சவுதி நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியதாலும், ஏமன், சடா நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சிறைச்சாலையில், சவுதி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈடுபாடுகளில் சிக்கிய கைதிகள், பொதுமக்கள் மற்றும் ஆப்பிரிக்க நாட்டு அகதிகள் பலியாகினர். இந்த தாக்குதலில் 200 பேர் படுகாயங்கள் அடைந்துள்ளததாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 60 க்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. சவுதியின் இத்தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா. கடுமையான கண்டனங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.