ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்த போது, அவற்றை இடைமறித்து அமீரகம் அழித்தது. அதன் வீடியோக்களை பகிருபவர்களுக்கு எச்சரிக்கைவித்துள்ளது அமீரக அரசு.
அமீரக வழக்கறிஞர் டாக்டர் ஹமத் சைஃப் அல் ஷம்சி, சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வீடியோக்கள் நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அனுப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீழ்த்தியபோது இரவு வானில் ஃப்ளாஷ்களைக் கண்டதாகவும், ஒலிகளைக் கேட்டதாகவும் அமீரக வாசிகள் தெரிவித்தனர். அதனால் அப்போது அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்திகளில் வரும் அறிவிப்புகளை பின்பற்றுமாறு பாதுகாப்பு அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. மேலும் சமூக ஊடக பயன்பாட்டை பாதுகாக்கவும், தனியுரிமையை உறுதி செய்யவும் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அமீரக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவது கிரிமினல் குற்றமாகும்.
சைபர் கிரைம் சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ செய்திகளுக்கு மாறாக, தவறான செய்திகள், வதந்திகளை இணையத்தில் பரப்பவோருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கபடும்.
அதிகாரிகளுக்கு எதிராக தவறான செய்திகளை பகிர்வதும், மக்களின் கருத்தை தூண்டுவதும் ,தொற்றுநோய், பேரழிவு குறித்து தவறான கருத்தை பகிர்ந்தாலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.