25.3 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

அமீரகம் திரும்ப விரும்புபவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? – படிப்படியான வழிமுறைகள்!

flight

உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் அமீரக வாசிகள் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இப்படி  வெளிநாடுகளில் தவிக்கும், செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ட்ஸ் விசா வைத்திருப்பவர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமீரகத்திற்குத் திரும்பலாம் என அமீரக அரசு நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. இதன்மூலம் அமீரகத்தில் வசிக்கும் தங்களது குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வாடும் மக்கள் அமீரகம் திரும்ப இருக்கின்றனர்.

முதலில் த்வாஜுதி (Twajudi) என்றழைக்கப்படும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மக்கள் பயணம் குறித்து விண்ணப்பிக்க வேண்டும். கருணை அடிப்படையிலான மற்றும் சிறப்பு சேவை தேவைப்படும் நபர்கள் உடனடியாக அமீரகம் திரும்ப இந்த நடைமுறை உதவும்.

uae-indian-expats,-chennai-flights,-coronavirus,-covid19,-mission-vande-bharat
Image Credit: (KT/Shihab)

இப்போது வெளிநாடுகளில் இருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்கள் “அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அமைச்சகத்தின்” (ICA) இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

1. உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படும் வரையில் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டாம்.

2.தேவைப்படும் ஆவணங்கள்:

  • வண்ணப் புகைப்படம்
  • ரெசிடென்சி நகல்
  • பாஸ்போர்ட் நகல்
  • வெளிநாடு சென்றதற்கான ஆதாரம் (நிறுவனம் அல்லது கல்வி நிலையம் அளிக்கும் கடிதம், சுற்றுலாவுக்காக சென்றிருந்தால் விமான டிக்கெட்.)

3. smartservices.ica.gov.ae என்னும் இணைய தளத்திற்குச் செல்லவும்.

4. ஸ்மார்ட் சர்விஸ் என்னும் பட்டியலின் கீழ் பகுதியில் உள்ள ‘OTHER SERVICES – RESIDENTS OUTSIDE UAE – ENTRY PERMISSION – ISSUE’ என்னும் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

5.’Start service’ என்பதனைக் கிளிக் செய்யவும்.

6.இணைய படிவத்தினைப் பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து அதனை சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.



error: Alert: Content is protected !!