UAE Tamil Web

GDRFA மற்றும் ICA அனுமதியைப் பெறுவது எப்படி? – படிப்படியான வழிமுறைகள்..!

GDRFA 1

ஒருவழியாக இந்தியர்களுக்கு மாதக்கணக்கில் பூட்டப்பட்ட தனது கதவுகளை அமீரகம் திறந்திருக்கிறது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த பயணத்தடையால் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், உகாண்டா, நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமீரக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தடையை விலக்கியிருக்கிறது. அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் திரும்பும் நபர்கள் அதாவது துபாய் தவிர பிற எமிரேட்டுகளுக்கு வருபவர்கள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ICA வில் அனுமதி பெறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதேவேளையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் திரும்புபவர்கள் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) தெரிவித்துள்ளது.

GDRFA அனுமதி பெறுவது எப்படி?

  1. GDRFA வின் அனுமதி பெறுவதற்கான இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

இதில் உங்களுடைய ரெசிடென்சி விசா எண், உங்களுடைய தாய்நாடு, பிறந்தே தேதி ஆகியவற்றைக் குறிப்பிடவும். பின்னர் Search என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது விண்ணப்பதாரருக்கான அக்கவுண்ட் திறக்கும்.

2. பயண தகவல்களைக் குறிப்பிடவும்.

இப்போது இணையப் பக்கத்தில் உங்களுடைய பெயர் ஆங்கிலம் மற்றும் அரபிக்கில் திரையில் தோன்றும். கூடவே உங்களுடைய பாஸ்போர்ட் எண்ணும் தோன்றும்.

இதற்குக் கீழே இருக்கும் Applicant information என்பதில் உங்களுடைய பயண தகவல்களை குறிப்பிடவேண்டும்.நீங்கள் எங்கிருந்து பயணத்தைத் துவங்குகிறீர்கள்? அமீரகத்தின் எந்த விமான நிலையத்திற்கு வருகிறீர்கள்? போன்றவற்றை குறிப்பிடவும். பின்னர் ஒருவேளை கொரோனாவினால் தாக்கபட்டால் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களை ஏற்கிறேன் என்பதை மறக்காமல் கிளிக் செய்யவும்.

3.ஆவணங்களை உள்ளிடவும்

உங்களுடைய பாஸ்போர்ட் நகல், புகைப்படம், PCR பரிசோதனை முடிவுகள், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். பின்னர் உங்களுடைய தகவல்களை ஒருமுறை சரிபார்த்த பின்னர், SEND என்பதைக் கிளிக் செய்யவும்.

துபாய் திரும்ப உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.

GDRFA 1
28 Shares
Share via
Copy link