UAE Tamil Web

துபாயில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்துவது எப்படி? முழு விபரம் உள்ளே..

போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் துபாய் போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்க இரண்டு நிமிடங்களே ஆகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அது என்ன சேவை?

துபாய் காவல்துறையின் வருவாய் மற்றும் நிதித் துறையின் இயக்குநர் மேஜர் அப்துல்லா யாசர் அமிரி கூறுகையில், “மத்திய வங்கி மற்றும் துபாய் இஸ்லாமிய வங்கியுடன் இணைந்து இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் இதைப் பெறலாம். மத்திய வங்கியுடன் கூட்டுப் பரிவர்த்தனை செயலாக்கத்தை முடித்த முதல் அரசு நிறுவனமாகவும், போக்குவரத்து அபராதம் செலுத்துவதில் முதல் காவல் ஏஜென்சியாகவும் துபாய் காவல்துறை உள்ளது.

டிராஃபிக் அபராத கட்டணங்களை, வாடிக்கையாளர்கள் காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியின் மூலம் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் இது ​​ஆவண பணி சிக்கல்களைக் குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது” என்று மேஜர் அப்துல்லா கூறினார்.

சேவை கட்டணம் உள்ளதா?

வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் மற்றும் வட்டி இல்லாமல் பரிவர்த்தனையை சுலபமாக முடிக்க முடியும் என்று அதிகாரி தெரிவித்தார்.

சேவைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்தச் சேவையின் மூலம் பயனடையலாம். விதிமீறல்களின் அபராதம் குறைந்தபட்சமாக 5 ஆயிரம் திர்ஹம்ஸ் ஆக இருக்க வேண்டும்.

அதிகபட்ச தவணைகளின் எண்ணிக்கைக்கு வரம்பு உள்ளதா?

வாகன உரிமையாளர்கள் அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு தவணைத் தொகையைத் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

சேவைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

மேஜர் அப்துல்லா கூறியதாவது: “வாடிக்கையாளர்கள், ‘நேரடி தள்ளுபடி’ சேவையை தேர்வு செய்து, வாகன எண், போக்குவரத்து எண் ஆகியவற்றை தேர்வு செய்வதின் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம். இதனை ஆப் அல்லது இணையதளம் வாயிலாகவும் செய்யலாம்.

பின்னர், அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை அடுத்து தவணை காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக OTP எண் உள்ளிடுவதன் மூலம் விண்ணப்ப செயல்முறை நீறைவடையும்” என்று அவர் கூறினார்.

1 Share
Share via
Copy link