கொரோனா தடுப்பூசி செலுத்திய பயணிகள் அபுதாபிக்கு பயணம் செய்ய PCR பரிசோதனை தேவையில்லை என்றும் தடுப்பூசி செலுத்தாத பயணிகள் பயணத்திற்கு முன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அபுதாபி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும், செலுத்தாதவர்களும் பொது இடங்களுக்குச் செல்ல Al Hosn கிரீன் பாஸ் கட்டயமாகும்.
அபுதாபிக்கு பயணம் செய்வதற்கான PCR சோதனை விதிகள் என்ன?
இது குறித்து, எதிஹாட் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணம் செய்வதற்கான விதிகள் குறித்து விவரித்துள்ளதாவது:
- முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு அபுதாபிக்கு புறப்படும் முன் PCR பரிசோதனை தேவையில்லை. தடுப்பூசி சான்றிதழ்களில் QR குறியீடு இருக்க வேண்டும்.
- அபுதாபிக்கு பயணிக்கும் தடுப்பூசி செலுத்தாத பயணிகள், புறப்டும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடிவ் PCR பரிசோதனை அல்லது புறப்படும் 30 நாட்களுக்குள் QR குறியீட்டைக் கொண்ட கோவிட்-19 சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது தேவையில்லை.
- அபுதாபிக்கு வந்தவுடன் பயணிகள் PCR பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
அபுதாபி விமான நிலையத்தில் PCR பரிசோதனை செய்ய முடியுமா.?
- அபுதாபி விமான நிலையத்தில் அபுதாபி விமான நிலையத்தில் PCR பரிசோதனை மையம் உள்ளது. அங்கு பயணிகள் தனது சொந்த செலவில் PCR பரிசோதனை செய்துக்கொள்ளலாம். பரிசோதனைக்கு 40 திர்ஹம்ஸ் ஆகும்.
Al Hosn செயலியில் கிரீன் பாஸைச் செயல்படுத்த, PCR சோதனை மேற்கொள்ள வேண்டுமா?
- அபுதாபி விமான நிலையத்தில் PCR பரிசோதனை மையம் உள்ளது. Al Hosn செயலியில் தங்கள் கிரீன் பாஸைச் செயல்படுத்த விரும்பும் பயணிகள் அபுதாபி விமான நிலையத்தில் PCR பரிசோதனை செய்துக் கொள்ளலாம். பொது இடங்களுக்குச் செல்ல Al Hosn கிரீன் பாஸ் கட்டயமாகும்.
Al Hosn கிரீன் பாஸை செயல்படுத்துவதற்கு PCR சோதனை விதிகள் என்ன?
- விசிட் அபுதாபி இணையதளத்தின்படி, கிரீன் பாஸுக்கு, தடுப்பூசி செலுத்திய பயணிகள் கிரீன் சிக்னலை பராமரிக்க ஒவ்வொரு 14 நாட்களுக்கும் நெகடிவ் PCR சோதனை முடிவைப் பெற வேண்டும்.
- அமீரக குடியிருப்பாளர்கள் Al Hosn பயன்பாட்டில் கிரீன் சிக்னலை பராமரிக்க சரியான நேரத்தில் தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசி எடுக்க வேண்டும். இந்த தேவை சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது.
- அதிகாரப்பூர்வ தடுப்பூசி விலக்கு கொண்ட பார்வையாளர்கள் கிரீன் சிக்னலை பராமரிக்க ஒவ்வொரு 7 நாட்களுக்கும் நெகடிவ் PCR சோதனை முடிவைப் பெற வேண்டும். PCR சோதனை அமீரகத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தடுப்பூசி அல்லது PCR சோதனை எடுக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு தானாகவே கிரீன் பாஸ் நடைமுறையில் பெறுகிறார்கள்.
- 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. ஆனால் Al Hosn செயலியில் கிரீன் சிக்னலை பெற PCR பரிசோதனை எடுக்க வேண்டும்.