இன்று திங்கட்கிழமை துபாயில் Etihad Airwaysன் Cabin Crew வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில் சேர தங்கள் Resumeகளை பதிவு செய்ய வரிசையில் நின்றிருந்தனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் UAEன் தேசிய கேரியரில் தங்கள் CVகளை சமர்பிப்பதற்காக காலை 9 மணிக்கு தொடங்கிய ஆட்சேர்ப்பு இயக்கத்திற்காக UAE நேரப்படி காலை 6.30 மணிக்கே வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
விண்ணப்பதாரர்கள் ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்கள் உட்பட பலதரப்பட்ட தேசிய இனங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Etihad Airways தனது Cabin Crewவில் சேருவதற்கு Hospitality துறையில் அனுபவமுள்ள 1,000 நபர்களை பணிக்கு எடுக்கவிருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ஜூன் 13, திங்கட்கிழமை, Etihad தனது Careers போர்ட்டலில் 90க்கும் மேற்பட்ட வேலைகளை குறித்து பட்டியலிட்டது.
“எதிஹாட் தற்போது தங்களது குழுவில் கேபின் க்ரூ, பைலட்கள், நிதி நிபுணர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பல துறைகளில் பணியாற்றுவதற்கு திறமையானவர்களைத் தேடி வருகின்றது என்று அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அபுதாபியை தளமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம், இந்த வார ஆட்சேர்ப்பின் ஒரு பகுதியாக, ஜூன் 13ம் தேதி, துபாயில் உள்ள துசித் தானி ஹோட்டலில் தங்கள் CVகளை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு வேலை தேடுபவர்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதிப்பீட்டிற்கு அழைக்கப்படுவார்கள்.