UAE Tamil Web

அமீரகம் வழியாக சவூதி செல்ல இந்தியர்கள் ஆர்வம் – காரணம் இதுதான்..!

saudi

சவூதி அரேபியா கடந்த புதன்கிழமையன்று கொரோனா காரணமாக விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதேபோல, உம்ரா சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் விலக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட சவூதி வாழ் மக்கள் மீண்டும் சவூதி திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில் டிராவல் ஏஜெண்ட் ஒருவரிடம் இதுகுறித்து நமது ஆசிரியர் குழு கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர்,” சவூதியில் கொரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே மீண்டும் சவூதி திரும்ப அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பயணிகள் குறிப்பிட்ட சிலரே, சவூதியில் தடுப்பூசி எடுத்திருக்கிறார்கள். மேலும், உம்ரா சேவைகள் துவங்க இருப்பதால் சவூதி செல்ல அதிகமானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர்” என்றார்.

அமீரகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவூதி விலக்கிக்கொண்டதால் பெரும்பாலான இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் அமீரகம் வழியாக சவூதி திரும்ப ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏனெனில் அமீரகத்தில் குவாரண்டைன் செய்துகொள்ள ஆகும் செலவு குறைவு  என்பதாலும் அமீரகம் – சவூதி இடையே விமானப் போக்குவரத்து அதிகளவில் நடைபெறுகிறது என்பதாலும் மக்கள் இவ்வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இருப்பினும் சவூதி பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விரைவில் விரிவான பயண விதிமுறைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்பதே மக்களின் ஆசையாக இருக்கிறது.

saudi
1 Share
Share via
Copy link
Powered by Social Snap