UAE Tamil Web

உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவி.. உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் அமீரகம்..!

ரஷ்யாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு உதவும் வகையில் அமீரக அவசரகால நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்காக அவசரகால சுகாதார உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள் 30 டன்-ஐ விமானம் மூலம் அமீரக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் உக்ரைனுக்கு கொண்டு செல்ல போலந்தில் உள்ள உக்ரைன் அதிகாரிகளுக்கு அனுப்பட்ட்டது.

உக்ரைனுக்கான அமீரகத்தின் தூதர் சலீம் அல்-காபி கூறுகையில், “மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை செய்வது அத்தியாவசிய மனிதாபிமான தேவைகளாகும். இது அமீரகத்தின் உறுதியான அர்ப்பணிப்பின் இது ஒரு பகுதியாகும். துரதிஷ்டமான இந்த சூழ்நிலையில் எங்களால் முடிந்த மனிதாபிமான உதவி” என தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு மனிதாபிமான அவசரநிலையையும் சமாளிக்க உலகின் அனைத்து மக்களுக்கும் அமீரகம் துணை நிற்கும். அவசரகால உதவி மற்றும் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை ஆதரிக்கும் மனிதாபிமான அணுகுமுறையை அமீரகத்தின் கடைபிடித்து வருகிறது என்றார் சலீம்.

உக்ரேனிய அகதிகளுக்கு அமீரகம் சார்பில் 18.36 மில்லியன் திர்ஹம்ஸ் வழங்க இருப்பதாக தூதர் சலீம் தெரிவித்தார்.

முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அமீரகம் ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap