துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் மார்ச் 7 முதல் 9 வரை 20வது வருடாந்திர பிராந்திய தணிக்கை மாநாடு (Annual Regional Audit Conference, ARAC) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மனித உருவ ரோபோட்டான (சோஃபியா) மார்ச் 8 தேதி நாளை செவ்வாய் கிழமை துபாய் வரவுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரோபோவான சோஃபியா மாநாட்டின் இரண்டாவது நாளில், ‘உள் தணிக்கைத் தொழிலில் செயற்கை நுண்ணறிவ’ (Artificial Intelligence in the Internal Audit Profession) என்ற தலைப்பில் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸின் எதிர்காலம் குறித்த அமர்வை நடத்தவுள்ளது.
உலகின் முதன் முறையாக குடியுரிமையை பெற்ற ரோபோட் சோஃபியா ஆகும். அக்டோபர் 2017 ஆம் ஆண்டு சவுதி அரசு அந்நாட்டு குடியுரிமையை மனித உருவம் கொண்ட ரோபோவான சோஃபியாவிற்கு வழங்கியது.
இதனால் சோஃபியா உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோவாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.